Dato’ Menteri Besar, Dato’ Seri Amirudin Saari (depan dua, kiri) bergambar bersama selepas Majlis Perasmian Inisiatif Selangor Freelancer anjuran Permodalan Nasional Selangor Berhad di Wyndham Acmar Hotel, Klang pada 28 Oktober 2021. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYPBTSELANGOR

சிலாங்கூர் ஃபிரிலான்ஸ் திட்டத்தில் பங்கேற்க சுமார் 2,000 பேர் பதிவு

ஷா ஆலம், நவ 20- கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட சிலாங்கூர் ஃபிரிலான்ஸ் திட்டத்தில் பங்கேற்பதற்கு இதுவரை 1,450 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு ஊக்கமூட்டும் வகையில் ஆதரவு கிடைத்து வருவதோடு இதற்கான பதிவு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று பி.என்.எஸ்.பி. எனப்படும் சிலாங்கூர் பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட்டின் பொது உறவுப் பிரிவு கூறியது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோரில் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று  அவர்களில் பலர் வேலை தேடுபவர்களாகவும் பகுதி நேரமாக தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களாகவும்  உள்ளனர் என அது குறிப்பிட்டது

சிலாங்கூர் ஃபிரிலான்ஸ் திட்டத்தில் பங்கேற்க இளையோரை நாங்கள் வரவேற்கிறோம். இத்திட்டத்தில் பதிவு செய்வோருக்கு 400 வெள்ளி ஊக்கத் தொகையாக வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

இத்திட்டம் சுமார் 5,000 பேருக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் வழி அவர்கள் தங்களின் ஆற்லை வளர்த்துக் கொள்வதற்கும் பொருளாதாரத்திற்கு உத்வேகத்தை அளிப்பதில் உதவுவதற்கும் வாய்ப்பு கிட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :