ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரை விவேக மாநிலமாக்கும் முயற்சிக்கு எஸ்.ஆர்.ஐ.இ. திட்டம் பங்களிப்பு

ஷா ஆலம், நவ 22- சிலாங்கூரை விவேக மற்றும் பரிவுமிக்க மாநிலமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க கண்காட்சியின் ஏற்பாடு (எஸ்.ஆர்.ஐ.இ.) அமைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உலகச் சந்தையில் மிக அத்தியாவசியமாகத் தேவைப்படும் தொழில்துறை புரட்சி 4.0க்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப சூழியல் முறையை விரிவாக்கும் அம்சங்களை இந்த கண்காட்சி கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

அரசாங்கத்தின் இந்த முயற்சி நீடித்த மேம்பாடு, சுபிட்சம், விவேகம் மற்றும் மக்கள் நலனை உறுதி செய்யும் என்று கோலாலம்பூர் மாநாட்டு  மையத்தில் நடைபெற்ற எஸ்.ஆர்.ஐ.இ. 2021 கண்காட்சியை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.

மந்திரி புசாரின் உரையை வர்த்தகம் மற்றும் தொழிலியல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் வாசித்தார்.

தொழிலியல், மின்சாரம், மின்னியல், சேவை, அறிவியல், உணவு மற்றும் பானத் தயாரிப்புத் துறை சார்ந்த 70 நிறுவனங்கள் 100க்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்களில் தங்களின் பொருள்கள் மற்றும் சேவைகளை காட்சிக்கு வைத்ததாக மந்திரி புசார் தமது உரையில் குறிப்பிட்டார்.

சிப்ஸ் எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.  இந்த மாநாடு கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு நடத்தப்பட்டது.


Pengarang :