ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

98.2 விழுக்காட்டு புதிய கோவிட்-19 சம்பவங்கள் குறைவான தாக்கம் கொண்டவை

கோலாலம்பூர், நவ 25-  நாட்டில் நேற்று பதிவான 5,755 கோவிட்-19 சம்பவங்களில் 98.2 விழுக்காடு அல்லது 5,654 சம்பவங்கள் குறைவான தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச்  சேர்ந்தவையாகும்.

எஞ்சிய 1.8 விழுக்காடு அல்லது 101 சம்பவங்கள் நிமோனியா, ஆக்சிஜன் உதவி மற்றும் செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படும் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று முன்தினம் 5,594 ஆக இருந்த கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 5654 ஆக உயர்ந்ததாக கூறிய அவர் புதிய நோய்த் தொற்றுடன் சேர்த்து இந்நோய்க்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 2 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

மொத்தம் 506 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 270 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி தேவைப்படுகிறது என்றார் அவர்.

நேற்று புதிதாக 8 நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் இதன் மூலம் தீவிரமான நிலையிலுள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :