EXCO Pelaburan Perdagangan dan Perindustrian Dato’ Teng Chang Khim menaiki Helikopter T625 Gokbey keluaran Turki pada Pameran Penerbangan Antarabangsa Selangor (SAS) 2021 di Pusat Penerbangan Serantau Skypark, Subang pada 25 November 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் வான் கண்காட்சியில் 43 அனைத்துலக, உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்பு

சுபாங், நவ 25- எஸ்.ஏ.எஸ். எனப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் வான் கண்காட்சி ஸ்கைபார்க் வட்டார வான் போக்குவரத்து மையத்தில் இன்று தொடங்கியது.

இந்த மூன்று நாள் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 43 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

“சிலாங்கூர், ஆசியான் வர்த்தக மற்றும் பொது வான் போக்குவரத்து மையம்“ எனும் கருப்பொருளிலான இந்த கண்காட்சியின் முதல் இரு தினங்கள் வான் போக்குவரத்து துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் வேளையில் மூன்றாவது தினம் பொது மக்களுக்கு திறந்து விடப்படும்.

முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் மற்றும் மாநில அரசு செயலாளர டத்தோ ஹரிஸ் காசிம் ஆகியோர் இன்று காலை இங்கு வருகை புரிந்து சுமார் ஒரு மணி நேரத்தை செலவிட்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

வான் போக்குவரத்து சார்ந்த பராமரிப்பு,பழுதபார்ப்பு, தயாரிப்பு, ஒருங்கிணைப்பு முறை, பொறியியல், வடிவமைப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்த சிலாங்கூர் அரசு இலக்கு கொண்டுள்ளது,

வான் போக்குவரத்து சார்ந்த தயாரிப்பு துறைகள் மூலம் அடுத்தாண்டில் 2,120 கோடி வெள்ளியை ஈட்ட மலேசியா திட்டமிட்டுள்ளது.


Pengarang :