ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர் அரசின் 2022 படஜெட் பெருமிதமளிக்கும் வகையில் அமையும்- மந்திரி புசார்

ஷா ஆலாம், நவ 26- சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள #Selangor2022 வரவு செலவுத் திட்டம் மாநிலம் மேலும் பெருமைமிக்கதாகவும், சிறந்ததாகவும் விளங்க உதவும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

2022 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் மாநில அரசு இந்த வரவு செலவுத் திட்டத்தை கவனமாகத் திட்டமிட்டுள்ள அதேவேளையில் மக்களின் வாழ்வில் பிரகாசத்தையும் மாநிலத்தின் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கத் தயாராகவும் உள்ளதாக அவர் சொன்னார்.

 கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொண்ட அனுபவமும் கித்தா சிலாங்கூர் 1.0 மற்றும் 2.0 தொகுப்புகளின் அமலாக்கம் மற்றும் சிலாங்கூர் பட்ஜெட் 2021 வாயிலாக அதன் விளைவுகளை எதிர் கொண்டதன் மூலம் கிட்டிய வெற்றியும் மக்கள் ஒன்றிணைந்து எழுவதற்கான  படிப்பினையாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு வசதிக்காக வாழ்க்கைச் செலவினத்தை மீட்சியுறச் செய்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உதவித் திட்டங்களை வலுப்படுத்துதல், இலக்கவியல் மயமாக்குதல், இயற்கை வளங்களைப் பேணுவதல்  ஆகியவை சிலாங்கூர் 2022 பட்ஜெட்டில் வலியுறுத்தப்பட்டுள்ள அம்சங்களாகும் என்று அவர் விளக்கினார்.

சிலாங்கூர் மக்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு   2022 வரவு செலவுத் திட்டத்தில் உள்ள அம்சங்களை அமல் செய்வதன் மூலம் நாம் அனைவரும் மேலும் பெருமையுடனும் மகத்துவத்துடனும் மீண்டும் எழுச்சி பெற முடியும் என்று மாநில அரசு நம்புகிறது என்று அவர் முகநூல் வாயிலாக தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் இன்று மாலை 3.00 மணிக்கு  சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் மீடியா சிலாங்கூர் வாயிலாக இந்த வரவு செலவுத் தாக்கல் நேரடியாக ஓளிபரப்பப்படும்.

 முக்கியமான நிகழ்வின் செய்திகளை சிலாங்கூர்கினி, மாண்டரின் , தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று இணைய பதிப்புகள் மூலம் படிக்கலாம் .

Pengarang :