ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

டிங்கி துடைத்தொழிப்பில்  தீவிர கவனம் செலுத்தப்படும்

ஷா ஆலம் 26நவ;- கடந்த  இரண்டு ஆண்டு காலமாக  கோவிட்  -19  தொற்று நிர்வகிப்பிற்கு மாநில அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வந்தபோதிலும்  டிங்கி காய்ச்சலின் அபாயம் மற்றும் மிரட்டல் குறித்து மறக்கவில்லை.   2021, அக்டோபர்   30 ஆம் தேதிவரை  சிலாங்கூர் மாநிலம் முழுவதிலும்  12,933 பேர் டிங்கி காய்ச்சலுக்கு உள்ளாகினர். அதோடு டிங்கி காய்சலினால் இருவர் உயிரிழந்தனர். டிங்கி தடுப்பு மற்றும் துடைத்தொழிப்பு முயற்சிகளை தொடர்வதற்காக அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில்   சிலாங்கூர் அரசாங்கம் 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.


Pengarang :