Juwairiya Zulkifli

சிலாங்கூரில் இவ்வாண்டு 1,076 சிறார் சித்திரவதை புகார்கள் பதிவு

ஷா ஆலம், டிச 1- இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சிலாங்கூர் மாநிலத்தில் 1,076 சிறார் சித்திரவதை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 527 புகார்கள் உடல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பானவையாகும். இது தவிர பாலியல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பில் 514 புகார்களும் மனோரீதியான துன்புறுத்தல் தொடர்பில் 35 புகார்களும் கிடைக்கப்பெற்றதாக மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

சிலாங்கூர் மாநில போலீஸ் துறையின் தரவுகளின் படி சிறார் சித்திரவதை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் சிறார்கள் சம்பந்தப்பட்ட பாலியல் தொந்தரவு சம்பவங்கள் குறித்து புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சித்தி மரியா இதனைக் கூறினார்.

சிறார்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் 11 சிறார் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ சொன்னார்.

இது தவிர அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 17 சிறார் நடவடிக்கை மையங்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் இக்குழுக்கள் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


Pengarang :