ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

7,258 சிறு வியாபாரிகளுக்கு இலக்கவியல் பயிற்சி வழங்கப்பட்டது

ஷா ஆலம், டிச 2- கடந்த நவம்பர் மாதம் வரை சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 7,258 சிறு வணிகர்களுக்கு இலக்கவியல் துறையில் மாறுவதற்கான வழிகாட்டல் பயிற்சி வழங்கப்பட்டது. நவீன வளர்ச்சியின் நீரோட்டத்தில் அவர்கள் பின்தங்கிவிடாமலிருப்பதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இளைஞர்களால் வழிநடத்தப்படும் ராக்கான் டிஜிட்டல் சிலாங்கூர் (ஆர்.டி.எஸ்.) வாயிலாக அந்த வணிகர்கள் இலக்கவியல் தொடர்பான பயிற்சிகளைப் பெற்றதாக வர்த்தகம் மற்றும் தொழிலியல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தரப்பினர் இலக்கவியல் யுகத்திலிருந்து பின்தங்கிவிடாமலிருப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக ஆர்.டி.எஸ் 1,000 இளைஞர்களை நியமித்துள்ளதாக அவர் சொன்னார்.

இலக்கவியல் துறையில் பயிற்சி பெறக் கூடிய 20,919 பேரை அடையாளம் கண்டு பதிவு செய்யும் நடவடிக்கையிலும் ஆர்.டி.எஸ். முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

ஆர்.டி.எஸ். மேம்பாடுகள் குறித்து பந்திங் உறுப்பினர் லாவ் வேங் சான் எழுப்பிய கேள்விக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சார்பாக பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

இத்திட்டத்திற்காக இதுவரை 30 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், அடுத்தாண்டிலும் இத்திட்டம் தொடரப்படும் என அவர் சொன்னார்.


Pengarang :