ECONOMYHEALTHNATIONALPENDIDIKAN

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அக்கறை காட்டும் ஆட்சியாளர்

ஷா ஆலம், டிச 9- நாடு கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானதிலிருந்து அந்நோய்க்கு எதிரான போராட்டம் மீது மேன்மை தங்கிய  சிலாங்கூர் சுல்தான் மிகுந்த அக்கறை கொண்டவராக விளங்கி வருகிறார்.

சிலாங்கூரில் பதிவாகும் நோய்த் தொற்று எண்ணிக்கை குறித்து சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அவர்கள் தொடர்ந்து கேட்டறிந்து வந்துள்ளார்.

இந்நோய்ப் தொற்று பரவலால் உறவுகளை இழக்கும் குடும்பத்தினர் மற்றும் பெற்றோர்களை இழக்கும் பிள்ளைகள் குறித்து அவர் மிகுந்த கவலை கொண்டிருந்தார்.

நோய்த் தொற்றினால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் மற்றும் அதன் தாக்கத்தால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு சுல்தான் அவர்களை மிகுந்த வருத்தமடையச் செய்தது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்.ஒ.பி.) கடைபிடிப்பதில்  அலட்சியப் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என்று அவர் பொது மக்களை அடிக்கடி நினைவுறுத்தி வந்தார். அதே சமயம், இந்நோய்த் தொற்றின் பாதிப்பினால் மக்கள் எளிதில் மனமுடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு அடிக்கடி ஊக்கமூட்டும் வார்த்தைகளையும் கூறி வந்தார்.

மக்கள் மீது கொண்ட அக்கறை காரணமாக சிலாங்கூர் மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதில் தாமதப் போக்கை கடைபிடித்த கூட்டரசு தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு பணிக்குழுவையும்  அவர் வன்மையாகச் சாடினார். அதேசமயம், மாநிலத்திற்கு தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே வேளையில் அதனை விரைவாகவும் வழங்கும்படியும் அறிவுறுத்தினார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் அதிக பங்களிப்பை வழங்கும் நிலையில் இதர விஷயங்களைக் காட்டிலும் மக்களின் உயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் சொன்னார்.

சிலாங்கூர் மக்களுக்காக இலவச கோவிட்-19 தடுப்பூசி சோதனைகளையும் அதனைத் தொடர்ந்து செல்வேக்ஸ் திட்டத்தின் வழி இலவச தடுப்பூசித் திட்டத்தையும் அமல் செய்த மாநில அரசை அவர் வெகுவாக பாராட்டினார்


Pengarang :