EKSKLUSIFSELANGOR

சிலாங்கூர் சுல்தான் பிறந்து நாள்- விருது பெறுவோர் பட்டியலில் அரச மன்ற உறுப்பினர் முதலிடம்

ஷா ஆலம், டிச 11- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுகள் மற்றும் பட்டங்கள் பெறுவோர் பட்டியலில் சிலாங்கூர் அரச மன்றத்தின் உறுப்பினர் துங்கு டத்தோ செத்தியா ரம்லி அல்ஹாஜ் துங்கு ஷாருடின் ஷா அல்ஹாஜ் முன்னிலை வகிக்கிறார். அவருக்கு டி.கே.11 எனப்படும் இரண்டாது அரச விருது வழங்கப்பட்டது.

அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டத்தோ ஸ்ரீ முகமது ஜூக்கி அலி டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஸ்ரீ படுகா மக்கோத்தா சிலாங்கூர் (எஸ்.பி.எம்.எஸ்.) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இது தவிர டி.பி.எம்.எஸ். எனப்படும் டத்தோ பட்டத்தை தாங்கி வரும் டத்தோ படுகா மக்கோத்தா சிலாங்கூர் விருது ஏழு பேருக்கு வழங்கப்பட்டது.

டத்தோ அந்தஸ்து கொண்ட டி.எஸ்.ஐ.எஸ். எனப்படும் டத்தோ சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா விருதை ஒன்பது பேர் பெற்றனர். மேலும் 19 பேர் எஸ்.எம்.எஸ். விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எஸ்.ஐ.எஸ் எனப்படும் செத்தியா சுல்தான்  ஷராபுடின் இட்ரிஸ் ஷா விருது 14 பேருக்கும் ஏ.எம்.எஸ். எனப்படும் அஹ்லி மக்கோத்தா சிலாங்கூர் விருது 15 பேருக்கு வழங்கப்பட்டது. இது தவிர, ஏ.ஐ.எஸ் விருதை 14 பேரும் பி.பி.சி விருதை எழுவரும் பெற்றனர்.

மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு 86 பேருக்கு உயரிய விருதுகளும் பட்டங்களும் வழங்கப்படும் என்று மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் முன்னதாக கூறியிருந்தார்.

உயரிய விருதுகள் பெறுவதற்கு 990 விண்ணப்பங்களை தாங்கள் பெற்றிருந்த போதிலும் அவற்றில் 17 அல்லது 1.7 விழுக்காடு மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :