MEDIA STATEMENTPENDIDIKANSELANGOR

”தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாட்டுக்கு மாநில அரசின் சேவை அளப்பரியது”- முன்னால் பெ\ஆசிரியர் சங்க தலைவர்

பெட்டாலிங் ஜெயா டிச 12 ;- சிலாங்கூரில் உள்ள எல்லா தமிழ்ப் பள்ளிகளுக்கும் நிதியுதவி ரி.ம. 5 மில்லியன்  வழங்கிவரும்  சிலாங்கூர்  அரசின் செயல் பாராட்டுக்குரியது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரில் உள்ள பெரும் பான்மையான தமிழ்ப் பள்ளிகளுக்கு கணிசமான நிதியுதவி ஆண்டு தோரும் சிலாங்கூர் மாநில அரசு செய்து வருகிறது.
2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் சட்ட மன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அரசு, மத்திய அரசு என்று கெஞ்சி கையேந்தி பிச்சை எடுத்த காலமாக இருந்தது என்பது வேதனையான காலம்.
ஆனால் 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன் முறையாக சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றத்திக்கு பின்னர் தான் சிலாங்கூரில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு விடிவு காலம் ஏற்பட்டது.
ஆம் சிலாங்கூரில் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கும் விடிவு காலம் பிறந்தது.
பல ஆண்டுகளாக நிதியிதவி இன்றி பெரும் போராட்டத்தை சந்தித்து வந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்திக்கு விடிவு காலம் பிறந்தது. 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் *சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 285,000.00* கொடுத்தது.
இந்த நிதியை கொண்டு தான் 2010 ஆம் ஆண்டில் 28%  யு.பி.எஸ்.ஆர் தேர்ச்சி விதமாக இருந்த எப்பிங்காம் தமிழ்ப் பள்ளி 2012 ஆம் ஆண்டில் 55  சதவீதமாக யு.பி.எஸ்.ஆர் தேர்ச்சி  உயர்வுக்கு கொண்டு வர முடிந்தது.
மேலும் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கு 2012 ஆண்டில்  சிலாங்கூர் மாநில அரசு ரி.ம. 85,000.00 நிதியுதவி  செய்தது. இந்த நிதியை கொண்டு தான் எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளியின் கணினி வகுப்பறையில் 40 கணினிகள் பொருத்தப் பட்டது . மேலும் இந்த கணினி வகுப்பறை  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் தொடர்ந்து முறையாக வழி நடத்தப் படுகிறது.
சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளின் பொது வசதி முன்னேற்றத்திலும் கல்வி தர மேம்பாட்டிலும் சிலாங்கூர் மாநில அரசின் தொண்டு அளப்பரியது. இந்த மகத்தான சேவையை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியும் , மாநில அரசும், ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் வீரமான் அவர்களும் தொடர்ந்து செய்ய வேண்டும்.
நமது இளைய தலை முறையினரின் வாழ்வில் விடிவு காலம் பிறக்க வேண்டும். மாநில அரசின் மகத்தான சேவைக்கு இந்திய சமூகம் தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டும். என்று எப்பிங்காம் தோட்ட தமிழ்ப் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுப்பையா சுப்ரமணியம்  சிலாவ்கூர் இன்றுவிடம்  கூறினார்.

Pengarang :