ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

பி40 குடும்பங்களைச்  சேர்ந்த 20 பேருக்கு மருத்துவ உதவி

மேரு, டிச 14- மேரு சட்டமன்றத் தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த 20 நோயாளிகள் 5,000 வெள்ளி வரையிலான மருத்துவ உதவியைப் பெற்றனர்.

நோயாளிகளின் நிதிச்சுமையைக்குறைக்கும் நோக்கில் இவ்வாண்டில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக மேரு தொகுதி உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.இந்த பெடுலி சேஹாட் திட்டத்திற்கு 30 நோயாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்தன.எனினும் தகுதியுள்ள 20 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மருந்துகள், கட்டில், சக்கர நாற்காலி போன்ற உபகரணங்கள் மற்றும் இதர வகை உதவிகள் இந்திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன என்றார் அவர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இந்த பெடுலி சோஹாட் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாதம் 2,000 , வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் 85,000 குடும்பங்களின் சுகாதார பாதுகாப்புக்கு உத்தவாதம் அளிக்கும் வகையில் இத்திட்டம் கடந்தாண்டில் மேம்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் அடிப்படை மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக குடும்பங்களுக்கு 500 வெள்ளியும் திருமணமாகாதவர்களுக்கு 200 வெள்ளியும் வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இது தவிர, விபத்தில் மரணமடையும் அல்லது நிரந்தர முடத்தன்மைக்கு ஆளாகும் பெடுலி சேஹாட் உறுப்பினர்களுக்கு 5,000 வெள்ளி வழங்கப்படும்.

மேலும், மரண சகாய நிதியாக 1,000 வெள்ளி, கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 வெள்ளி,இயற்கை மரணங்களுக்கு 5,000 வெள்ளியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

Pengarang :