ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஐந்து தொகுதிகளில் டிசம்பர் 17 முதல் ஊக்கத் தடுப்பூசித் திட்டம்

ஷா ஆலம் டிச 15- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் ஐந்து தொகுதிகளில் இம்மாதம் 17 ஆம் தேதி முதல் மாத மாத இறுதி வரை ஊக்கத் தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படும்.

பலாக்கோங் தொகுதியில் வரும் வெள்ளிக் கிழமையும் பண்டார் உத்தாமா தொகுதியில் 18 மற்றும் 19 ஆம் தேதிகளிலும் ரவாங் தொகுதியில் 20ஆம் தேதியும் தாமான் டெம்ப்ளர் தொகுதியில் 26 ஆம் தேதியும் ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதியில் 30 ஆம் தேதியும் இந்த தடுப்பூசி இயக்கம் நடைபெறும்.

ரவாங், பத்து 17, எம்.பி.எஸ் சமூக மண்டபத்தில் நடைபெறும் ரவாங் தொகுதிக்கான தடுப்பூசி இயக்கதிற்கு 1,000 தடுப்பூசிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார். https://shorturl.at/mqLNS  என்ற அகப்பக்கம் வாயிலாக இத்திட்டத்திற்கு பதிவு செய்யலாம் என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே. இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் உடனடியாக தொகுதி சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளும்படி தாமான் டெம்ப்ளர் தொகுதி மக்களை சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கேட்டுக் கொண்டார்.

கோம்பாக், செலாயாங் மூலியா மண்டபத்தில் நடைபெறும் இந்த இயக்கத்திற்கு 500 முதல் 1,000 தடுப்பூசிகள் வரை தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ கெம்பங்கான் தொகுதி நிலையிலான தடுப்பூசி இயக்கம் செர்டாங் ராயா, எம்.பி.எஸ்.ஜே. 3கே காம்ப்ளெக்சில் நடைபெறும் என்று சட்டமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா குறிப்பிட்டார். 

இந்த தடுப்பூசி இயக்கத்தில் பங்கு கொள்ள https://bit.ly/sk-booster-vaksin  என்ற அகப்பக்கம் வாயிலாக முன் பதிவு செய்யாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

 


Pengarang :