ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

வெள்ளம்: தாமன் ஸ்ரீ மூடாவில் கள செயல்பாட்டு மையத்தை கே.கே.எம் திறந்தது

 ஷா ஆலம், 22 டிச: திங்கள்கிழமை   ஷா ஆலம் செக்சன் 25  தாமான் ஸ்ரீ மூடாவில்  திறக்கப்பட்ட சுகாதார அமைச்சகத்தின் (MOH) கள செயல்பாட்டு மையம், நாள் ஒன்றுக்கு 50 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது மற்றும் அவசரகால சிறப்பு மருத்துவர் மற்றும் 10 படுக்கைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. .

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதிக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, அதன் அமைச்சர் கைரி ஜமாலுதீன் அவர்களால் முன்மொழியப் பட்டபடி, சுகாதார அமைச்சகத்தால் (MOH) இந்த செயல்பாட்டு மையம் முதலில் திறக்கப் பட்டது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“இந்த செயல்பாட்டு மையம் இத்துறையில் ஒரு மினி அவசர அறை போல செயல் படுகிறது. சிறந்த சேவைக்கு இது எங்களுக்கு முக்கியமானது, ”என்று அவர் இன்று வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியான தாமன் ஸ்ரீ மூடாவிற்கு வருகை தந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இம்மையம் லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதாகவும், மருந்து தீர்ந்து போகும் குடியிருப்பாளர்கள் மருத்துவமனைக்குச் செல்லாமல் இருக்க மருந்துகளை வழங்குவதாகவும் அவர் கூறினார். “தீவிர சிகிச்சை அல்லது இரத்தப்போக்கு  வழக்குகள் மற்றும் கடுமையான சிகிச்சைக்கு மட்டுமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும், ஆனால் நாங்கள் இங்கு முதலில் ஆரம்ப சிகிச்சை அளிப்போம்,” என்று அவர் கூறினார்.

தற்காலிக நிவாரண மையம் மூடப்படும் வரை இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார். சிலாங்கூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மேலும் மூன்று கள செயல்பாட்டு மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள தனியார் மருத்துவமனைகளுடன் MOH இணைந்து பணியாற்றும், குடியிருப்பாளர்களுக்கு சிறந்த உதவிகளை வழங்குவதை உறுதிசெய்யும் என்றார்.

எலி மூத்திரம், வயிற்றுப்போக்கு, உணவு விஷம் போன்ற தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புள்ளதால், வெள்ளத்திற்குப் பிறகு ஏற்படும் நிலை குறித்து இப்போது எங்கள் கவலை.

எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தூய்மையைப் பேணுமாறும், கோவிட்-19 தொற்றைத் தடுக்க நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.


Pengarang :