ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONALSELANGOR

நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும் அடையாளமாக விளங்கும் இந்நன்னாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் – சார்ல்ஸ்

கிள்ளான், 25 டிச. ஹோ ஹோ ஹோ..  கிறிஸ்துமஸ் வந்தாச்சு. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே “கொடுக்கும்  பருவம்”  என்றாகும். இப்பருவத்தில் கிறிஸ்துமஸ் பெருநாளன்று  நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை அன்புடன் பரிமாறிக் கொள்வது வழக்கம்.
இப்பண்டிகையை கொண்டாடும் வேளையில், கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் விடுத்துள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு ஆணையால், பல மக்கள் வருமானம் இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது என நினைவுறுத்தினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
மற்றவருடன் பகிரும் இந்த பருவத்தில், வறுமை கோட்டில் தத்தளிக்கும் குடுபத்தினரின் நிலை அறிந்து அவர்களுக்கு நம்மால் முடிந்த வரை உணவு பொருட்கள், ஆடை அணிகள் என கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும். மேலும் தற்போது பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக காய்கறிகள் மற்றும் கோழி இறைச்சி போன்ற உணவு பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால், சிறு மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சத்தான உணவுகளை வழங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குவதை நம்மால் காண முடிகிறது.
ஆகவே, இந்த பெருநாள் காலக்கட்டத்தில் பண சுமையை குறைக்க தேவைப்படுவோருக்கு  அன்பளிப்புகளை அல்லது சத்தான உணவு பொருட்களையோ கொடுத்து அவர்களை இன்புற செய்வோம் என கேட்டுக் கொண்டார் சார்ல்ஸ்.
மேலும், அரசாங்கம் அறிவுறுத்தி வரும் “பூஸ்டர் டோசையும்” 2022 ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் எடுத்துக் கொள்ள மறவாதீர்கள் என கேட்டுக் கொள்ளுகையில், கிறிஸ்துமஸ்  மற்றும்  புத்தாண்டுக்கு  மிகப்பெரிய அளவில் கொண்டாட்டத்திற்கு  அனுமதி இல்லை என்பதையும் நினைவில் கொண்டு  எஸ்ஓபி களை பின்பற்றி கொண்டாடுவோம் என கூறி நம்பிக்கைக்கும்   நன்னெறிக்கு அடையாளமாக விளங்கும் இந்நன்னாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை  தெரிவித்துக் கொண்டார் சார்ல்ஸ்.

Pengarang :