MEDIA STATEMENTNATIONAL

வாரிசான் மூடா கட்சிகள்  கபடதாரியின்  சவாரிக்கு  குதிரையாகுமா- மக்கள் கேள்வி

பெட்டாலிங்  ஜெயா டிச 25-  இருபது  ஆண்டுகள் பதவியிலிருந்த பொழுது அவரை  கடுமையாக  எதிர்த்த  ஜ. செ.க மற்றும்  தனக்கு  மாற்றாக  இன்னொருவரை  அம்னோவில்  வளரவிடக் கூடாது  என்று  டத்தோ ஶ்ரீ  அன்வாரை  சிறையிலிட்டவரை,   அன்வார்    உட்பட  அனைவரும்  மன்னித்து  அந்த கபடதாரியின்  கையில்  நம்பிக்கை கூட்டணியின்  கடிவாளத்தை  ஒப்படைக்க  வைத்த அந்த  மகா சூரன்.
எதிர்க் கட்சி கூட்டணிக்குள் புகுந்து தலைவராகி பின்னர் அந்த கூட்டணியை வீழ்த்துவது தான்  பதவி வெறி பிடித்த  அக் கபடதாரி யின் கணக்கு,  மூன்றாம்  முறையாக அரசியல் பிரவேசத்திற்கான  வேலையை  தொடங்கி விட்டார?   அந்த  மகாசூரனின் வலையில்   வாரிசான் மூடா கட்சியிகள்  சிக்குமா,  அக்கட்சிகளின்  கடிவாளத்தை  மகாசூரனின்   சவாரிக்கு  வழங்குமா  என்பதே இன்று  மக்கள் முன்  உள்ள முக்கிய   கேள்வி?
ஏன் இதை செய்கிறார்.? அம்னோ மற்றும் தேசிய முன்னணி  மக்களின் செல்வாக்கை நம்பிக்கையை இழந்து வரும். வேளையில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வலுவாகி கொண்டிருக்கிறது.
ஆகவே எதிர்க் கட்சி கூட்டணிக்குள் புகுந்து *உறவாடி கொடுப்பது* மேலும் ஆங்கிலேயர்களின் கொள்கையான *Divide and rule* ( பிரித்து ஆள்வது ). இந்த அரசியல் சூழ்ச்சியை நிறைவேற்றத் தான் முதலில் Bersatu என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் அக்கட்சியின் தலைவர் என்ற முறையில் எதிர்க் கட்சி கூட்டணியின் தலைமை பீடத்தை டத்தோ ஸ்ரீ அன்வாரிடமிருந்து கைப்பற்றினார்.
இரண்டாவது முறையாக அன்வாரை அரசியலிருந்து வீழ்த்துவதற்கே *Sheraton Move* அரசியல் கபட நாடகத்தை நிறைவேற்றினார்.
இதற்கு பிறகும் டத்தோ ஸ்ரீ அன்வார் தொடர்ந்து அரசியல் களத்தில்  தேவைப்படுகிறார். இதன் அடுத்த கட்ட அரசியல் நகர்வு தான் *Pejuang, Muda, Warisan* போன்ற கட்சிகளா   என்று  மக்கள் விவாதிக்க  தொடங்கி விட்டனர்,  இந்த வரிசையில் மேலும் பல புதிய கட்சிகளும் வரலாம் ! அவர் கூட்டணியுடன்  இணையக் காத்திருக்கும்  இந்திய  கட்சிகள்  தேர்தல்  நெருங்கும்  போது  தலையை    வெளியே காட்டும். என  தெரிகிறது.
ஆனால்  அறிவார்ந்த  மலேசியர்கள்  மீண்டும்  கபடதாரியின்  வலையில் சிக்குவார்களா ?  நாட்டின் எதிர்காலம் ,  அவர்களின் பிள்ளைகளின்  நல்வாழ்வுக்கு  உறுதியளிக்கும்  ஒரு  மக்கள் கூட்டணியை  தேர்வு செய்வார்களா என்பதை 15வது பொதுத் தேர்தலே முடிவு செய்யும்  என்கிறார்  ஒரு  அரசியல்  விமர்சகர்   திரு. சுப்பையா சுப்பரமணியம்.

Pengarang :