நாட்டில் புதிதாக 49 ஒமிக்ரோன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு

புத்ரா ஜெயா, டிச 25- நாட்டில் புதிதாக 39 ஒமிக்ரோன் வகை நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்த மூலம்  இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

இவற்றில் ஒரு சம்பவம் உள்நாட்டிலிருந்து பரவியதாக சந்தேகிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

அந்த உருமாற்றம் கண்ட புதிய வகை கோவிட்-19 தொற்று சரவா மாநிலத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 15 முதல் 21 வரை நாட்டிற்கு வந்த 145 வெளிநாட்டினரிடம் ஐ.எம்.ஆர். எனப்படும் மருத்துவ ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட பி.சி.ஆர், சோதனையில் 60 பேரிடம் ஒமிக்ரோன் வகை நோய்த் தொற்றுக்கான சாத்தியம் உள்ளது கண்டறியப்பட்டது என்றார் அவர்.

அந்த 60 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையில் 45 பேர் ஓமிக்ரோன் வகை தொற்றினால் பாதிக்கப்பட்டது கடந்த 24 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.

இது தவிர மலேசிய சரவா பல்கலைக்கழகத்தின் சுகாதார மற்றும் மருத்துவ கழகம் 4 ஒமிக்ரோன் வகை நோய்த் தொற்றுகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :