KUALA LUMPUR, 2 Okt — Kakitangan Dewan Bandaraya Kuala Lumpur (DBKL) dan pihak Polis Diraja Malaysia (PDRM) hari ini meninjau lokasi kejadian tanah runtuh melibatkan Pangsapuri Persiaran Syed Putra di Taman Persiaran Desa malam semalam. Sebelas penghuni di sebuah pangsapuri tiga tingkat di Persiaran Syed Putra di sini, berdepan detik cemas apabila tebing tanah berhampiran kediaman mereka runtuh akibat hujan lebat, malam semalam. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACANATIONAL

புத்தாண்டு முதல் நாளில் 7 இடங்களில் நிலச் சரிவு

கோலாலம்பூர், ஜன 2- புத்தாண்டின் முதல் நாளான நேற்று நாட்டில் ஏழு இடங்களில் நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

சிலாங்கூரில் ஆறு சம்பவங்களும் நெகிரி செம்பிலானில் ஒரு சம்பவமும் அடையாளம் காணப்பட்டதாக கனிம வள மற்றும் புவி அறிவியல் துறை (ஜே.எம்.ஜி.) கூறியது.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் நாடு முழுவதும் 140 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக நட்மா எனப்படும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நிகழும் நிலச்சரிவுகள் குறித்த தகவல்களை ஜே.எம்.ஜி.  சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களிடம் தெரிவிக்கும். அச்சம்பவங்கள் தொடர்பான அறிக்கை மேல் நடவடிக்கைக்காக மாநில ஜே.எம்.ஜி.யிடம் ஒப்படைக்கப்படும். 

நேற்று காலை 10.00 மணி வரை சாலைகள், மலைச்சாரல்களில் மண்சரிவு, பாலம் உடைந்தது, மண் அமிழ்வு உள்ளிட்ட 53 இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்துள்ளதாக  பொதுப் பணித்துறை கூறியது.

 வெள்ளத்தின் போது சேதமடைந்த 1.039 தொலைத் தொடர்பு கட்டமைப்புகளில் 1,007 சரி செய்யப்பட்டுவிட்டதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் கு
றிப்பிட்டுள்ளது.

Pengarang :