ECONOMYHEALTHNATIONALPENDIDIKAN

கல்வியமைச்சின் உயர்கல்விக் கூடங்களில் நாளை முதல் உடல் உஷ்ண சோதனை அவசியமில்லை

கோலாலம்பூர், பிப் 10- கல்வியமைச்சின் கீழுள்ள அனைத்து உயர்கல்விக் கூடங்களிலும் நாளை தொடங்கி உடல் உஷ்ண சோதனை கட்டாயமாக்கப்படாது.

எனினும், அனைத்து ஆசிரியர்கள், அமலாக்கத் தரப்பினர், துணைப் சேவைப் பிரிவினர் மற்றும் வருகையாளர்கள் கல்விக்கூட வளாகத்தில் நுழைவதற்கு முன்னர் கியுஆர் குறியிட்டை மைசெஜாரா செயலியில் பதிவிட வேண்டும் என்று கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்னர் அவர்கள் நல்ல உடலரோக்கியத்தோடும் நோய்க்கான அறிகுறியின்றியும் இருப்பதை உறுதி செய்யும்படி பெற்றோர்களை கேட்டுக் கொள்கிறோம் என்று அது தெரிவித்தது.

பொது இடங்களில் நுழைவதற்கு முன்னர் உடல் உஷ்ணத்தை சோதனையிடுவது, புத்தகத்தில் பதிவு செய்வது போன்ற எஸ்.ஒ.பி. நடைமுறைகள் நாளை தொடங்கி ரத்து செய்யப்படுவதாக தற்காப்பு மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்ததன் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.

நோய்த் தொற்றுக்கான அறிகுறி கொண்டிருக்கும் மற்றும்  கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சு தெரிவித்தது.

நோய்த் தொற்றுக்கான அறிகுறி உள்ள மாணவர்களை உடனடியாக சிறப்பு அறைகளில் தனிமைப்படுத்துவதற்கு ஏதுவாக பள்ளிகளில் மாணவர்களின் உடல் நிலை தொடர்ந்து அணுக்கமாக கண்காணிக்கப்படும்.

கல்வியமைச்சில் பதிந்து கொள்ளாத இதர உயர்கல்விக் கூடங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்றும் அமைச்சு கூறியது.


Pengarang :