ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய் கண்டவர்கள் எண்ணிக்கை நேற்று 19,090 ஆகப் பதிவு 

ஷா ஆலம், பிப் 10– நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மொத்தம் 19,090 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 17,134 ஆக இருந்தது.

இன்று பதிவான மொத்த நோய்த் தொற்றுகளில் 18,977 அல்லது 99 விழுக்காடு நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் மற்றும் லேசான அறிகுறி கொண்ட இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

எஞ்சிய 113  நோயாளிகள் அதாவது 0.59 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஒன்று முதல் ஐந்தாம் கட்டம் வரையிலான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் கட்டம் – 4,898சம்பவங்கள் (26.6%)

2 ஆம் கட்டம் – 14,079 சம்பவங்கள் (73.75%)

3 ஆம் கட்டம் – 79 சம்பவங்கள் (0.41%)

4 ஆம் கட்டம் – 28 சம்பவங்கள் (0.15%)

5 ஆம் கட்டம் – 6 சம்பங்கள் (0.03%)

கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கி கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை அபரிமித உயர்வைக் கண்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை 5,720 சம்பவங்களும் ஞாயிற்றுக்கிழமை 10,089 சம்பவங்களும் செவ்வாய்க்கிழமை 13,791 சம்பவங்களும் பதிவாகின.


Pengarang :