HEALTHNATIONALPBT

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுசுழற்சி தொட்டிகள் – எம்.டி.எஸ்.பி

ஷா ஆலம்,பிப் 15: சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கும் முயற்சியாக ஐந்து இடங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுசுழற்சி தொட்டிகளை வைக்க சபக் பெர்ணம் மாவட்ட கவுன்சில் (எம்.டி.எஸ்.பி) முன்முயற்சி எடுத்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால், தமனியில் அடைப்பு, மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் குழந்தையின்மை போன்ற ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஊராச்சிமன்றம்  தெரிவித்துள்ளது.

“சமையல் எண்ணெய் கழிவுகள் பொதுவாக வீட்டு சமையலறைகள், உணவகங்கள் மற்றும் கடைகளில் இருந்து பெறப்படுகின்றன, மேலும் எண்ணெய் கழிவான பிறகு, அது சாக்கடையில் கொட்டப்படுகிறது அல்லது மடுவில் ஊற்றப்படுகிறது.

இதன்பின், பயன்படுத்திய எண்ணெய் கழிவுகளை தன்னிச்சையாக வீச வேண்டாம் என பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார். எம்.டி,எஸ்,பியின் ஒரு தொடக்கமாக மறுசுழற்சி தொட்டிகள் ஐந்து இடங்களில் வைக்கப்பட்டன, அதாவது அபாஹ் இகான் பாக்கர் டி’முரா சுங்கை ஹாஜி டோரானி உணவகம், குவாலா குராவ் சுங்கை பெசார் உணவகம்; ஜாலான் டெபேடு சபக் ஃபுட் கோர்ட், தமன் பெர்விரா சுங்கை பெசார் மற்றும் ஸ்ரீ காசிம் செகின்சன் உணவகம்.


Pengarang :