ANTARABANGSAHEALTHMEDIA STATEMENT

தினசரி கோவிட்-19 எண்ணிக்கை 90,000 ஆக உயர்வு- ஒமிக்ரோன் தொற்றுடன் போராடும் தென் கொரியா

சியோல், பிப் 16– ஒமிக்ரோன் வகை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிராக தென் கொரியா போராடி வரும் வேளையில் அந்நாட்டில் நேற்று 90,443 சம்பவங்கள் பதிவாகின.

ஒத்துழைப்பு நல்கி வரும் மக்களுக்கு மனமார மன்னிப்பு கோருகிறேன். எனினும், மருத்துவமனைகளில் படுக்கைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருந்தது மற்றும் வீடுகளில் சிகிச்சை செய்வதை விரிவாக்கம் செய்தது ஆகிய காரணங்களால் நமது மருத்துவத் துறை பிரச்னைகளை எதிர் நோக்கவில்லை என்று பிரதமர் கிம் பூ யும் கூறினார்.

தென் கொரியாவில் நேற்று 90,443 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் பதிவானதை விட இது 57,164 சம்பவங்கள் அதிகமாகும்.

நடப்பிலுள்ள கூடல் இடைவெளி முறையை மறுபரிசீலனை செய்வதா என்பதை அரசாங்கம் வரும் வெள்ளியன்று முடிவு செய்யும் என அவர் தெரிவித்தார்.

கடந்த இரு மாதங்களாக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரோன் நோய்த் தொற்று பரவல் மற்றும் அதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்விவகாரம் மீது முடிவெடுக்க வேண்டியதாக உள்ளது என அவர் சொன்னார்.


Pengarang :