ECONOMYSELANGOR

பண்டான் இன்டா, தெராத்தாய் தொகுதிகளில் நாளை மலிவு விலையில் கோழி விற்பனை

ஷா ஆலம், பிப் 16- சிலாங்கூர் அரசின் விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிலோ 8.00 வெள்ளி விலையில் கோழி விற்கும் இயக்கம் பண்டான் இன்டா மற்றும் தெராத்தாய் தொகுதிகளில் நாளை மேற்கொள்ளப்படும்.

காலை 9.00 மணி முதல் மேற்கொள்ளப்படும் இந்த இயக்கத்தில் முட்டை, காய்கறிகள் மற்றும் பழவகைகளும் விற்பனை செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் கூறியது.

லோரி ஏசான் மூலம் நாங்கள் கோழியை கிலோ 8.00 வெள்ளி விலையில் விற்பனை செய்யும் அடுத்த இடம் பண்டான் இன்டா மற்றும் தெராத்தாய் தொகுதிகளாகும்.

ஒவ்வொரு லோரியும் 200 கோழிகள், 150 தட்டு முட்டைகள், 50 காய்கறி மற்றும் பழவகை பொட்டலங்களைக் கொண்டிருக்கும் என்று சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தனர்.

உணவுப் பொருள் விலையேற்றம் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைப் போக்க கிலோ 8.00 வெள்ளி விலையில் கோழியை விற்கும் திட்டத்தை மாநில அரசு கடந்த 7 ஆம் தேதி தொடக்கியது.

வரும் மாரச் மாதம் வரை மலிவு விலையில் கோழி விற்பனை செய்யப்டும் இடங்கள் வருமாறு

• 19 பிப்ரவரி மற்றும் 16 மார்ச் (டுசுன் துவா மற்றும் செமினி)

• 20 பிப்ரவரி மற்றும் 17 மார்ச் (காஜாங், சுங்கை ரமால் மற்றும் பாலக்கோங்)

• 21 பிப்ரவரி மற்றும் 19 மார்ச் (ஸ்ரீ கெம்பாங்கன் மற்றும் ஸ்ரீ செர்டாங்)

• 22 பிப்ரவரி மற்றும் 20 மார்ச் (கின்ராரா மற்றும் சுபாங் ஜெயா)

•  23 பிப்ரவரி மற்றும் 21 மார்ச் (ஸ்ரீ செத்தியா, தாமான் மேடான் மற்றும் புக்கிட் காசிங்)

• 24 பிப்ரவரி மற்றும் 22 மார்ச் (கம்போங் துங்கு, பண்டார் உத்தாமா மற்றும் புக்கிட் லஞ்சான்)

• 26 பிப்ரவரி மற்றும் 23 மார்ச் (பாயா ஜெராஸ் மற்றும் கோத்தா டாமன்சாரா)

• 27 பிப்ரவரி மற்றும் 24 மார்ச் (கோத்தா அங்கிரிக் மற்றும் பத்து தீகா)

• 28 பிப்ரவரி மற்றும் 26 மார்ச் (மேரு, செமெந்தா மற்றும் செலாட் கிளாங்)

• 1 மற்றும் 27 மார்ச் (பண்டார் பாரு கிள்ளான், கோலக் கிள்ளான் மற்றும் பண்டமாரன்)

• 2 மற்றும் 28 மார்ச் (செந்தோசா, சுங்கை காண்டிஸ் மற்றும் கோத்தா கெமுனிங்)

• 3 மற்றும் 29 மார்ச் (சிஜங்காங், பந்திங் மற்றும் மோரிப்)

• 4 மற்றும் 30 மாரச் (தஞ்சோங் சிப்பாட், டெங்கில் மற்றும் சுங்கை பீலேக்

 


Pengarang :