HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 26,832 ஆகப் பதிவு

ஷா ஆலம், பிப் 21– நாட்டில் நேற்று கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,832 ஆகப் பதிவானது. அவற்றில் 133 சம்பவங்கள் அல்லது 0.5 விழுக்காடு மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக் கொண்டவையாகும்.

எஞ்சிய 26,699 சம்பவங்கள் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 133 பேரில் 29 பேர் அல்லது 21.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாக அல்லது அறவேப் பெறாதவர்கள் என்று அவர் சொன்னார்.

புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் நோய்த் தொற்றுக்கு இலாக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 21 ஆயிரத்து 680 ஆக உயர்வு கண்டுள்ளது.

நேற்று பதிவான கோவிட்-19 சம்பவங்களில் 26,764 உள்நாட்டினர்  வாயிலாக பரவிய வேளையில் இதர 68 சம்பவங்கள் வெளிநாட்டினர் மூலம் இறக்குமதியானவை என்று அவர் தெரிவித்தார்.

நேற்று 118,459 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததாக கூறிய அவர், இதன் வழி அந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 37 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

இந்நோய் கண்டவர்களில் 261 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 139 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 15 நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்து நாட்டில் தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 6,719 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு நேற்று37 பேர் பலியாகினர். இதனுடன் சேர்த்து அந்நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணக்கை 28,832 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :