ECONOMYSELANGOR

‘ஜோப்கேர்‘ திட்டத்தின் வழி 3,000 வேலை வாய்ப்புகள் – பிப்ரவரி 26 முதல் நடைபெறும்

ஷா ஆலம், பிப் 24- சிலாங்கூர் மாநில அரசு “ஜெலாஜா ஜோப்கேர்“ எனும் மாநில அளவிலான பயணத் திட்டத்தின் வாயிலாக சுமார் 3,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவுள்ளது.

இந்த திட்டத்தை சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து யு.பி.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் தொழிலாளர் ஆக்கத்திறன் அளிக்கும் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.

மாநிலத்திலுள்ள 9 மாவட்டங்களில் இம்மாதம் 26 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை நடைபெறும் வேலை வாய்ப்பு பயணத் திட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக யு.பி.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர் விஜயன் சுப்பிரமணியம் கூறினார்.

கோவிட்-19 தொற்று காரணமாக வேலை இழந்த குறைந்த, நடுத்தர மற்றும் உயர் திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் இந்த வேலை வாய்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும்படி சிலாங்கூர்  மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். இந்த நிகழ்வில் சொச்சோ மூலம் கிடைக்கப்பெறும் அனுகூலங்கள் குறித்தும் விளக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் வேலையில்லாப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதிலும் இத்திட்டம் துணை புரியும் என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த யு.பி.பி.எஸ். அமைப்பின் அடிப்படை நோக்கத்திற்கேற்ப மாநிலத்தில் வேலையில்லாப் பிரச்னைக்கு தீர்வு காண நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் பங்கு பெற விரும்புவோர்   https://uppselangor.wixsite.com/my-site.   எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.

ஜோப்கேர் வேலை வாய்ப்பு சந்தை நடைபெறும் நாள் மற்றும் இடங்கள் வருமாறு-

1. Klang – Dewan Hamzah (26 Februari)
2. Hulu Selangor – Dewan Seri Garing, Rawang (12 Mac)
3. Petaling – Dewan Serbaguna Camelia, Seksyen 10, Putra Height (26 Mac)
4. Kuala Selangor – Dewan Dato’ Penggawa (26-27 Mac)
5. Petaling – Dewan Serbaguna Camelia Seksyen 10, Putra Height (3-4 April)
6. Sepang – Dewan Taman Gemilang, Dengkil (14 Mei)
7. Hulu Langat – Dewan Demesne (21 Mei)
8. Gombak – Dewan Taman Gombak (4 Jun)
9. Kuala Langat – Dewan Sri Jugra (18 Jun)
10. Sabak Bernam – Dewan Sri Bernam (25 Jun)


Pengarang :