ECONOMYSELANGOR

சிலாங்கூரில் நீர், வெள்ள மேலாண்மை செலவின மதிப்பு 700 கோடி வெள்ளி

சபா பெர்ணம், மார்ச் 1– சிலாங்கூரில் நீர் மற்றும் வெள்ள மேலாண்மை செலவினத்தின் மதிப்பு 700 கோடி வெள்ளி ஒதுக்கீட்டை உட்படுத்தியுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் கூறினார்.

லங்காவியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிக்குழு மீள்பார்வை நிகழ்வின் போது இந்தச் செலவினம் தாக்கல் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு இக்கூட்டத்தில் கொள்கையளவில் ஒப்பு கொள்ளப்பட்டது. மத்திய அரசின் ஒரு பகுதி நிதியை உள்ளடக்கிய இத்திட்டம் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும். இத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு மாநில அரசு மற்றும் துணை நிறுவனங்களின் நிதியைப் பயன்படுத்துவோம் என்று அவர் சொன்னார்.

வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் நீர் சேகரிப்பு குளங்கள், கால்வாய், வடிகால், ஆறுகள், சுரங்கப்பாதை, நீர் தடுப்பணை உள்ளிட்ட அனைத்து முறைகளும் உள்ளடங்கியுள்ளன. இந்த விபரங்களை நான் செய்தியாளர் கூட்டத்தில் துல்லியமாக எடுத்துரைப்பேன் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள தாமான் பெர்ஜெயா, பாலாய் ராக்யாட்டில் மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 

 


Pengarang :