ECONOMYNATIONAL

கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ளத் தயார் நிலை அறிக்கை பிப். 23 முதல் வெளியிடப்படுகிறது

கோலாலம்பூர், மார்ச் 1- கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ளத் தயார் நிலை தொடர்பான அறிக்கை பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் வெளியிடப்பட்டு வருவதாகப் பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு பணிகள்) டத்தோ டாக்டர் அப்துல் லத்தி அகமது கூறினார்.

இந்த அறிக்கையைத் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனமான நட்மா, தேசியப் பேரிடர் கட்டுப்பாட்டு மையங்கள் (என்.டி.சி.சி.) வாயிலாகச் சம்பந்தப்பட்ட மாநிலங்களிலுள்ள பேரிடர் குழுக்களிடம் வழங்கியதாக அவர் சொன்னார்.

துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்களை வழங்குவது, முன்கூட்டியே உத்தரவுகளைப் பிறப்பிப்பது ஆகியவை மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஊராட்சி மன்றங்களின் கடும் நடவடிக்கையாக அமைந்தது. இதன் தொடர்பில் நேர்மறையான பதில்களைப் பேரிடர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற்றன என்று மக்களவையில் அவர் தெரிவித்தார்.

கிழக்குக் கரை மாநிலங்களில்  தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரைக் கையாள்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து  டுங்குன் தொகுதி உறுப்பினர் வான் ஹசான் முகமது ரம்லி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் வெள்ள அகதிகளை மீட்கும் பணி அனைத்து பேரிடர் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து சீரான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :