HEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 62.9 விழுக்காட்டினர் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 3 – நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 14,810,832 பேர் அல்லது 62.9 விழுக்காட்டினர் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின் அடிப்படையில், மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 51 ஆயிரத்து 398 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 32 லட்சத்து 31 ஆயிரத்து 225 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து முதல் 11 வயதுடையவர்களில் மொத்தம் 929,733 பேர் அல்லது 26.2 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 மற்றும் 17 வயதிற்குட்பட்ட இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 2 ஆயிரத்து 265 பேர் அல்லது 90.1 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 28 லட்சத்து 98 ஆயிரத்து 437 பேர் அல்லது 93.2 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

26,923 முதல் டோஸ் ஊசிகள், 1,389 இரண்டாவது டோஸ் ஊசிகள் மற்றும் 69,222 ஊக்கத் தடுப்பூசிகள் உள்பட மொத்தம் 97,534 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, இது தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசி அளவுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6 கோடியே 74 லட்சத்து 16 ஆயிரத்து 313 ஆக உயர்ந்த்து.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, நேற்று கோவிட்-19 காரணமாக 115 இறப்புகள் பதிவாகியுள்ளன.

– பெர்னாமா


Pengarang :