ECONOMYSELANGOR

இலக்கைத்  தாண்டி,  ஹலால்  வணிக  மாநாடு  RM3.7  கோடிக்கும்  அதிகமான  ஆடர்களை  பெற்றது.

ஷா  ஆலம்,  மார்ச் 7:  சிலாங்கூர்  சர்வதேச  ஹலால்  மாநாடு  (செல்ஹாக்) 2022  இல்  வணிகப்  பொருத்தம்  RM3.77  கோடி  மதிப்புள்ள  பரிவர்த்தனைகளைப்  பதிவு செய்தது.

ஹலால்  துறை  ஆட்சிக்குழு உறுப்பினர்  முகமது  ஜவாவி  அகமது  முக்னி,  முந்தைய  இலக்கு  RM2  கோடி  மட்டுமே  என்பதால்  இந்தத்  தொகை  எதிர்பாராதது  என்றார்.

“3.77  கோடியின்  மொத்தப்  பரிவர்த்தனை  அல்லது  புரிந்துணர்வு  ஒப்பந்தம்  குறித்துச்  செயலகத்தால்  தெரிவிக்கப்பட்ட  பிறகு  நான்  அதிர்ச்சியடைந்தேன்.

“இந்த  வளர்ச்சி  மற்றும்  பரிவர்த்தனையின்  வெற்றியை  நாங்கள்  கண்காணிப்போம்,”  என்று  அவர்  கூறினார்.

இன்று  ஷா  ஆலம்  கன்வென்ஷன்  சென்டரில்  நடந்த  செல்ஹாக்  விழாவில்  கலந்து  கொண்ட  பின்னர்  அவர்  இவ்வாறு  கூறினார்.

சர்வதேச ஹலால்  சிலாங்கூர்  (HIS)  மற்றும்  மலேசிய  இஸ்லாமிய  வர்த்தகம் மேளனம்  (DPIM)  சிலாங்கூர்  ஆகியவற்றுடன்  இணைந்து  சிலாங்கூர்  அரசாங்கம்  ஏற்பாடு  செய்த  தொடக்க  மாநாட்டில்  மூன்று  கூறுகளுக்கு  இடையிலான  வணிகப்  பொருத்தம்  சிறப்பிக்கப்பட்டது.

இன்று  முடிவடைந்த  மூன்று  நாள்  நிகழ்ச்சியும் கண்காட்சியும்,  காலை  10  மணி  முதல்  இரவு  9.30  மணி வரை  உணவு,  மருந்தகம்,  அழகு,  சுற்றுலா,  ஃபேஷன்  மற்றும்  ஹலால்  பொருட்கள்  அடங்கிய  ஒன்று.  இந்த  நிகழ்வில்  மொத்தம்  100  கண்காட்சியாளர்கள்  பங்கேற்றனர்.

 

 


Pengarang :