HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தாக்கம் சற்றுத் தணிந்தது- நேற்று 27,435 பேர் பாதிப்பு

ஷா ஆலம், மார்ச் 7- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று சற்றுத் தணிந்து 27,435 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 33,406 ஆக இருந்தது.

நேற்றைய தொற்றுகளில் 27,181 உள்நாட்டினர் மூலமாகவும் 254 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வாயிலாகவும் பரவின.

தாக்கம் அதிகம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 184 ஆகப் பதிவாகியுள்ளது. நோய்க்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் கட்டப் பாதிப்பை 19,756 பேரும் லேசான அறிகுறி கொண்ட இரண்டாம் கட்டப் பாதிப்பை 17,495 பேரும் கொண்டுள்ளனர்.

நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 4 நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்துத் தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 454 உயர்ந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

பிரிவு வாரியாகக் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு- 9,756 சம்பவங்கள் (35.56 விழுக்காடு)
2 ஆம் பிரிவு- 17,495 சம்பவங்கள் (63.77 விழுக்காடு)
3 ஆம் பிரிவு- 89 சம்பவங்கள் (0.33 விழுக்காடு)
4 ஆம் பிரிவு- 53 சம்பவங்கள் (0.19 விழுக்காடு)
5 ஆம் பிரிவு- 42 சம்பவங்கள் (0.15 விழுக்காடு)

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 16 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து அந்நோய் தொற்றுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 33,228 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :