ANTARABANGSAECONOMYNATIONAL

மலேசியா-சிங்கப்பூர் இடையே தரை வழிப்பாதை ஏக காலத்தில் திறக்கப்படும்

ஜோகூர் பாரு, மார்ச் 7– நாட்டின் எல்லைகள் திறக்கப்படும் போது மலேசியாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் ஜோகூர் கோஸ்வே பாலம் மற்றும் இரண்டாவது இணைப்பு பாலம் ஆகிய தரை வழிப்பாதைகள் ஏக காலத்தில் திறக்கப்படும் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

இதன் மூலம் சிங்கப்பூரியர்கள் மலேசியாவுக்கு வருவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்பதோடு கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறைக்கும் புத்துயிரூட்ட முடியும் என்று அவர் சொன்னார்.

நாட்டின் எல்லைகள் திறக்கப்படுவது தொடர்பான அறிவிப்பைப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி  யாக்கோப் விரைவில் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை வரவேற்பதற்காகச் சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சு தயாராக உள்ளது என்று இன்று சுற்றுலாத் துறையினருடன் சந்திப்பு நடத்திய பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நாட்டின் எல்லைகள் விரைவில் திறக்கப்படும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில்  அண்மையில் கூறியிருந்தார். நீண்டகாலமாக சந்திக்காமலிருந்த உறவுகளை மலேசிய குடும்பத்தினர் மீண்டும் சந்திப்பதற்குரிய வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :