ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று 30,787 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று

ஷா ஆலம், மார்ச் 11– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 30,787 ஆகப் பதிவானது நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 30,246 ஆக இருந்தது.

கடும் தாக்கம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை 244 நோயாளிகள்  எதிர்நோக்கியுள்ள வேளையில் நோய்த் தொற்றுக்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் கட்டப் பாதிப்பை 10,921 பேரும் லேசான அறிகுறி கொண்ட இரண்டாம் கட்டப் பாதிப்பை 19,642 பேரும் கொண்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 244 நோயாளிகளில் 58 பேர் அல்லது 25.89 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெறாதவர்கள் அல்லது அறவே பெறாதவர்களாவர். மேலும் 94 பேர் அல்லது 41.96 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்று ஊக்கத் தடுப்பூசியைப் பெறாமலிருக்கின்றனர்.

எஞ்சிய 72 பேர் அல்லது 32.14 விழுக்காட்டினருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிரக் கடும் பாதிப்பைக் கொண்ட நோயாளிகளில் 122 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாகவும் 96 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும்  உள்ளனர் எனத் தெரிவித்த அவர், மேலும் இருவர் கர்ப்பிணிகள் என்றார்.

பிரிவு வாரியாகக் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு- 10,921 சம்பவங்கள் (35.47 விழுக்காடு)

2 ஆம் பிரிவு- 19,642 சம்பவங்கள் (63.80 விழுக்காடு)

3 ஆம் பிரிவு- 93 சம்பவங்கள் (0.30 விழுக்காடு)

4 ஆம் பிரிவு- 74 சம்பவங்கள் (0.24 விழுக்காடு)

5 ஆம் பிரிவு- 57 சம்பவங்கள் (0.19 விழுக்காடு)

நாட்டில் இதுவரை கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37 லட்சத்து 41 ஆயிரத்து 986 ஆக உயர்வு கண்டுள்ளதாக நோர் ஹிஷாம் கூறினார்.


Pengarang :