ECONOMYNATIONAL

ஜோகூர் தேர்தல் வாக்களிப்பு முடிந்தது- வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

ஜோகூர் பாரு, மார்ச் 12- இன்று காலை மணி 8.00 மணிக்கு ஜோகூர் மாநிலம் முழுவதும் உள்ள 1,021 வாக்குச் சாவடிகளில் தொடங்கிய வாக்களிப்பு மாலை 6.00 மணிக்கு முடிவுக்கு வந்தது.

வாக்களிப்பு முடிவுக்கு வந்தவுடன் வாக்குச் சாவடிகளிலிருந்து 4,638 வாக்குப் பெட்டிகள் சேகரிக்கப்பட்டு 56 வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. தேர்தல் முடிவுகள் இன்றிரவு தெரிய வரும்.

இத்தேர்தலுக்கு மொத்தம் 36,729 தபால் வாக்குகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. பாதுகாப்பு படையினர் மற்றும் அவர்களின் துணைவியாரை உட்படுத்திய 18,625 பேர் கடந்த 8 ஆம் தேதி முன்கூட்டியே வாக்களித்தனர்.

மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளில் 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


Pengarang :