ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூர் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு 7.00 மணி வரை கனமழை

ஷா ஆலம், மார்ச் 14– சிலாங்கூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று இரவு 7.00 மணி வரை இடியுடன் கூடிய கன மழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோலாலம்பூர் தவிர்த்து சிலாங்கூரில்  உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட், ஜோகூரில்  சிகாமட், மூவார், பத்து பாகாட் மற்றும் குளுவாங், பேராக்கில் கோல கங்சார், கிந்தா, கம்பார், பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம், கெடா மற்றும் பெர்லிஸில்  குபாங் பாசு, பாடாங் தெராப், சிக் மற்றும் பாலிங் ஆகிய பகுதிகளில் இந்நிலை நீடிக்கும் என்று அது கூறியது .

இடியுடன் கூடிய மழையின் அளவு ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை தொடர்பான ஆக சமீபத்திய தகவல்களைப் பெற பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளத்தை வலம் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :