ANTARABANGSAECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 தொற்றினால் தென்கிழக்காசியாவில் மேலும் 47 லட்சம் பேர் பரம ஏழைகளானார்கள்

மணிலா, மார்ச் 16– கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாகத் தென்கிழக்காசியாவில் மேலும் 47 லட்சம் பேர் மேலும் மோசமான வறிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த எண்ணிக்கை வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏ.டி.பி), பொருளாதார வளர்ச்சியை உந்தச் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட நாடுகளைக் கேட்டுக் கொண்டது.

தினசரி 1.90 அமெரிக்க டாலருக்கும் குறைவாக  வருமானம் பெறுவோர் மோசமான வறுமை நிலையில் உள்ளவர்களாகப் பட்டியலிடபட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் 2 கோடியே 43 பேர் உள்ளதாகவும் இது  தென்கிழக்காசியாவின் 65 கோடி மக்கள் தொகையில் 3.7 விழுக்காடாகும் என்றும் உலக மேம்பாட்டு வங்கி கூறியது.

பெருந்தொற்றுப் பரவலுக்கு முன்னர் தென்கிழக்காசியாவில் மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த  2017இல் 2 கோடியே 12 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 2018 இல் 1.8 கோடியாகவும் 2019 இல் 1.49 கோடியாகவும் பதிவாகியிருந்தது.

நோய்த் தொற்றுப் பரவல் தென்கிழக்காசியாவிலுள்ள மக்களிடையே குறிப்பாக பெண்கள், இளம் தொழிலாளர்கள் மத்தியில் வேலையின்மை, சமத்துவமின்மை போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுத்துள்ளதாக ஏ.டி.பி. தலைவர் மசாட்சுகு அசாகாவா கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகப் பொருளார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முடக்கம் தென்கிழக்காசியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 93 லட்சமாகக் குறைத்துள்ளதோடு லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் சூழலையும் ஏற்படுத்தியது.


Pengarang :