ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூரில் நெடுஞ்சாலை, அடிப்படை வசதித் திட்டங்களுக்கு புதிய விதிமுறை அமல்

ஷா ஆலம், மார்ச் 17- சிலாங்கூரில் புதிதாக மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை மற்றும் அடிப்படை வசதித் திட்டங்கள் யாவும் மாநில அரசு அண்மையில் நிறைவேற்றிய புதிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

திட்டமிடல் தொடர்பான நடப்பு நிபந்தனைகளில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவினால் ஒப்புல் அளிக்கப்பட்டு மாநில ஆட்சிக்குழு கடந்த மாதம் 9 ஆம் தேதி அங்கீகாரம் வழங்கியதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர்  இஷாம் ஹஷிம் கூறினார்.

மாநிலத்தில் புதிய நெடுஞ்சாலைகள் மற்றும் பெரிய அளவிலான அடிப்படை வசதித் திட்டங்கள் தொடர்பான திட்டமிடல் அட்டவணையை பிளான் மலேசியா  சிலாங்கூர் வாயிலாக மாநில அரசு வெளியிட்டுள்ளது என்றார் அவர்.

அனைத்து உத்தேச திட்டங்களும் மூன்று முறை மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று புக்கிட் காசிங் உறுப்பினர் ஆர்.ராஜீவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு சொன்னார்.

பெட்டாலிங் ஜெயா டிஸ்பெர்சல் லிங்க் நெடுஞ்சாலையின் ஆகக்கடைசி மேம்பாடுகள் குறித்தும் அந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்க மாநில அரசுக்கு உள்ள திட்டம் குறித்தும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.


Pengarang :