ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தினசரி நோய்த்தொற்றுகள் 22,341 ஆகக் குறைந்துள்ளது

ஷா ஆலம், மார்ச் 20: தினசரிக் கோவிட் -19 தொற்றுகள் நேற்று 22,341 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளன, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 1,900 சம்பவங்கள் குறைந்துள்ளது. தீவிர நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாக நிலையில் உள்ளது.

அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் கட்டம் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டம் 22,188 தொற்றுகள் அல்லது   99.32 விழுக்காடு என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“இன்று பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையில், மொத்தம் 153 சம்பவங்கள் அல்லது 0.68 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ளனர்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பின்வருபவை நோயாளிகளின் தாக்கங்களின்  அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன:

1 ஆம் கட்டம்: 10,181 சம்பவங்கள் (45.57 விழுக்காடு)

2 ஆம் கட்டம்: 12,007 சம்பவங்கள் (53.75 விழுக்காடு)

3 ஆம் கட்டம்: 58 சம்பவங்கள் (0.26 விழுக்காடு)

4 ஆம் கட்டம்: 45 சம்பவங்கள் (0.20 விழுக்காடு)

5 ஆம் கட்டம்: 50 சம்பவங்கள் (0.22 விழுக்காடு)

 

நாட்டில் மொத்தம் 3,974,019 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Pengarang :