ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் 81.9 விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

ஷா ஆலம், மார்ச் 21- சிலாங்கூர் மாநிலத்தில் இம்மாதம் முதல் தேதி வரை பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 37 லட்சத்து 28 ஆயிரத்து 125 பெரியவர்கள் அல்லது 81.9 விழுக்காட்டினர் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அதே காலக்கட்டத்தில் 43 லட்சத்து 34 ஆயிரத்து 507 பேர் அல்லது 95.2 விழுக்காட்டுப் பெரியவர்கள் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 43 லட்சத்து 15 ஆயிரத்து 18 பேருக்கு அல்லது 94.8 விழுக்காட்டினருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று சிஜங்காங் உறுப்பினர் டத்தோ டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இளையோரில்  531,193 பேர் அல்லது 93.3 விழுக்காட்டினர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 482,503 பேர் அல்லது 84.8 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளதாக அவர்  அவர் மேலும் தெரிவித்தார்.

இது தவிர 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 22.9 விழுக்காட்டினர் அல்லது 167,388 பேருக்கு இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :