Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari melihat barang keperluan asas makanan yang siap dibungkus untuk diagihkan kepada penerima dalam program Serahan Sumbangan Barangan Basah kepada Ketua-ketua Kampung dan Ahli Majlis di Padang Awam Batu Caves, Gombak pada 15 Ogos 2021. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ANTARABANGSAECONOMYSELANGOR

இந்த வார இறுதியில் 10 இடங்களில் மலிவு விற்பனைத் திட்டம்

ஷா ஆலம், மார்ச் 22: மாநில அரசின் பரிவுமிக்க வணிக  திட்டம் இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 10 இடங்களில் தொடரும்.

சனிக்கிழமை அன்று செமெந்தா சட்டமன்றம், மேரு மற்றும் செலாட் கிள்ளான், கிள்ளான்; தாமான் புத்ரா பெர்டானா நடைபாதை மையம், சிப்பாங் மற்றும் டதாரான் கோம்பாக், சிலாயாங் ஆகியவற்றை உள்ளடக்கிய இடங்களை சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்றம், போர்ட் கிள்ளான் மற்றும் பண்டமாரன், கிள்ளான்; தாமான் ஸ்ரீ செத்தியா தஞ்சோங் காராங் மற்றும் காப்பாரில் உள்ள உழவர் சந்தையிலும் இந்த விறபனை நடைபெறும்.

விற்பனையில்  உள்ள பொருட்கள்  RM12 விலையில் நடுதரமான கோழி சுமார் 1.5 கிலோ அல்லது அதற்கு மேல், புதிய திடமான மாட்டு இறைச்சி ஒரு கிலோவுக்கு RM35, கிரேடு B முட்டைகள் (ஒரு தட்டு மூட்டைR M10) மற்றும் கானாங்கெளுத்தி அல்லது செலாயாங் பேக்கிற்கு RM8 எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் 64 பகுதிகளில் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கி ஒவ்வொரு வாரமும் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

ஹரி ராயா பெருநாள் வரையிலான முன்முயற்சியில் 10,000 கோழிகள், 3,100 கிலோ புதிய மாட்டு இறைச்சி, 6,200 கிலோ கானாங்கெளுத்தி மற்றும் செலாயாங் மீன்கள் மற்றும் 315,000 தர பி முட்டைகள் விற்பனை செய்யப்படும்.


Pengarang :