MEDIA STATEMENT

சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது

சிப்பாங், மார்ச் 22 – இங்குள்ள சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (ஐபிடி) முதல் மாடியில் ஐபிடி நிர்வாக அறை அமைந்துள்ள இடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

​​மாலை 6.15 மணிக்கு சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், KLIA தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ், பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

“30 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தை உறுதி செய்த சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப், மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.


Pengarang :