ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட் -19 தினசரி எண்ணிக்கை  21,483 ஆக பதிவு

ஷா ஆலம், மார்ச் 23: நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை இறங்கு முகமாக உள்ள நிலையில் நேற்று 21,483 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு தினசரி கோவிட் -19 தொற்று விகிதம் 20,000 க்கு மேல் திரும்பியது.

முந்தைய நாளான 17,828 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது 3,655 சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

தீவிரமான நோயாளிகளின் எண்ணிக்கை 166 சம்பவங்கள் அல்லது 0.77 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ளனர், அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் கட்டம் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டம் 21,317 தொற்றுகள் அல்லது 99.23 விழுக்காடு என்று சுகாதார தலைமை இயக்குனர், டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“நேற்று பதிவுசெய்யப்பட்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் மொத்தம் 51 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெறாதவர்கள் அல்லது அறவே பெறாதவர்களாவர் மற்றும் 64 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்று ஆனால் பூஸ்டர் டோஸ் பெறாத நபர்களை உள்ளடக்கியது.

“91 சம்பவங்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள், 96 சம்பவங்கள் ஒன்றுக்கும் அதிகமான நோய் உள்ளவர்கள் மற்றும் இரண்டு சம்பவங்கள் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளடக்கியது ” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பின்வருபவை நோயாளிகளின் தாக்கங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன:

1 ஆம் கட்டம்: 10,455 சம்பவங்கள் (48.67 விழுக்காடு)

2 ஆம் கட்டம்: 10,862 சம்பவங்கள் (50.56 விழுக்காடு)

3 ஆம் கட்டம்: 57 சம்பவங்கள் (0.27 விழுக்காடு)

4 ஆம் கட்டம்: 46 சம்பவங்கள் (0.21 விழுக்காடு)

5 ஆம் கட்டம்: 63 சம்பவங்கள் (0.29 விழுக்காடு)

நேற்று மொத்தம் 73 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதில் 25 மருத்துவமனைக்கு வெளியே இறப்புகள் பதிவாகியுள்ளன, 32,561 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,7,45,229 ஆக உள்ளது.

 


Pengarang :