ECONOMYNATIONAL

இந்தோ. பணிப்பெண்களை வேலைக்கமர்த்தும்  செலவு 7,800 வெள்ளி- மக்களவையில் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 23- இந்தோனேசிய பணிப்பெண்களை வேலைக்கமர்த்துவதற்கு உண்டாகும் செலவு 7,800 வெள்ளியாகும் என மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பணிக்கு மலேசிய தரப்பில் 6,000 வெள்ளியும் இந்தோனேசிய தரப்பில் 1,800 வெள்ளியும் செலவு பிடிக்கும் என்று துணை மனித வள அமைச்சர் டத்தோ அவாங் ஹஷிம் கூறினார்.

மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தப்படி 7,800 வெள்ளி செலவாகும். இதைவிட அதிகமாக யாரும் கட்டணம் விதித்தால் அது குறித்து மனித வள அமைச்சிடம் புகார் செய்யலாம் என மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னர் இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு எடுப்பதற்கு உண்டாகும் துல்லியமான செலவு மற்றும் வங்காளதேசத்திலிருந்து தொழிலாளர்களைத் தருவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்து பத்து கவான் உறுப்பினர் பி. கஸ்தூரி ராணி பட்டு கேள்வியெழுப்பியிருந்தார்.

இக்கேள்விக்கு பதிலளித்த துணையமைச்சர்,  மொத்தம் 275 வங்காளதேச ஆள் தருவிப்பு ஏஜென்சிகள் மூலம் வங்காளதேச தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு  அமைச்சரவை கடந்தாண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அனுமதி வழங்கியதாக கூறினார்.


Pengarang :