ECONOMYSELANGOR

359 முன்னணி பணியாளர்களின் குடும்பங்களின் சுமையைக் குறைக்க MBI RM11 லட்சம் ஒதுக்கியுள்ளது

ஷா ஆலம்- சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பு அல்லது எம்பிஐ,  சக்னா  திட்ட முன்னணி பணியாளர்களின் குழந்தை திட்டத்திற்காக RM11 லட்சம் ஒதுக்கியுள்ளது.

மாநில அரசின் 10 மாத உதவி  மூலம் 359 குடும்பங்களைச் சேர்ந்த 474 முன்னணி பணியாளர்களின் குழந்தைகள் இத்திட்டத்தின் வழி பயனடைந்ததாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

“ஆரம்பத்தில், நாங்கள் 300 குடும்பங்களைச் சேர்ந்த 400 குழந்தைகளை மட்டுமே இலக்காகக் கொண்டோம், ஆனால் அது வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியவுடன் பங்குகொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை இலக்கை  தாண்டியது. அதனால் பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களின் எண்ணிக்கையும் 85ல் இருந்து 114 நபர்களாக அதிகரித்தது.

“ சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பு வாழ்வு மேம்பாட்டை மூலோபாயமாகக் கொண்டுள்ளது. எம்பிஐ எப்போதும் மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டு. மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவி வருகின்றது, அந்த ரீதியில் இன்று டத்தோ மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடக்கும் சக்னா முன்னணி பணியாளர்களின் குழந்தைகள் பாராட்டு விழா என நோரிடா முகமட் சிடெக் கூறினார்.

மேலும், சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு அமைப்பின் (பெகாவானிஸ்) தலைவர் டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முகமட் இதில் கலந்து கொண்டார் .

திட்டத்தைச் செயல்படுத்துவதில் தனது  தரப்பு ஐந்து அம்ச அணுகுமுறையை எடுத்ததாக நோரிடா விளக்கினார், குறிப்பாக முன் கள பணியாளர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் பணிகளில் கவனம் செலுத்துவதை உறுதி செய்வது..

“இம் முயற்சி குழந்தைகளை நன்கு பராமரிக்கவும், வளர்க்கவும் உதவுகின்றன. உண்மையில்,  இங்கு பணியில் இருக்கும் தன்னார்வலர்களும் கோவிட்-19 ஆல் பணிநீக்கம் செய்யப்பட்ட நபர்கள்.

“அடுத்து,  அவசர உதவி பெட்டிகளை {செஞ்சிலுவை பெட்டி} பயன்படுத்துதல் மற்றும் உணவைக் கையாளுதல் போன்ற பணிகளிலும் அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன.

கடந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி, மாநில அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக வளாகங்களில் குழந்தை பராமரிப்பு சேவைகள் மற்றும் தற்காலிகப் பராமரிப்பு மையங்களை உருவாக்குவதற்கான முயற்சியை நடைமுறைப்படுத்தியது,  இது சிலாங்கூர் முழுவதும் கிட்டத்தட்ட 400 முன்னணி பணியாளர்களின் குடும்பங்களுக்குப் பயனளிக்க நோக்கம் கொண்டது.

.


Pengarang :