ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 :16.863 பேர் பாதிக்கப்பட்டனர்- 26,171 பேர் குணமடைந்தனர்

ஷா ஆலம், மார்ச் 28 – நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை நேற்று 16,863 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 20,923 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக அதாவது 26,171 ஆகப் பதிவானதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதன் வழி இந்நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 70 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நோய் காரணமாக நேற்று 850 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் அவர்களில் 362 பேர் அல்லது 42.6 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் மேலும் 488 பேர் அல்லது 57.4 விழுக்காட்டினர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கையைப் பொறுத்த வரை இரு மாநிலங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்களின் பயன்பாடு 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. கோலாலம்பூரில் 63 விழுக்காடாகவும் சிலாங்கூரில் 50 விழுக்காடாகவும் இந்த எண்ணிக்கை உள்ளது என்றார் அவர்.

நாடு முழுவதும் உள்ள பி.கே.ஆர்.சி. மையங்களில் கட்டில்களின் பயன்பாடு 50 விழுக்காடாக உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 187 அல்லது 21 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :