ECONOMYHEALTHNATIONAL

செர்டாங் மருத்துவமனையின் இருதய சிகிச்சை ஆய்வு மையத்திற்கு சிலாங்கூர் சுல்தான் வருகை

செர்டாங், மார்ச் 28– தேசிய இருதய சிகிச்சை சேவைக்கான முதன்மை வழிகாட்டு மையமாக விளங்கும் இருதய சிகிச்சை ஆய்வு மையத்திற்கு (ஐ.சி.எல்.) மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இன்று வருகை புரிந்தார்.

செர்டாங் மருத்துவமனையில் உள்ள அந்த மையத்திற்கு இன்று காலை 10.00 மணியளவில் வருகை புரிந்த சுல்தான் சுமார் ஒன்றரை மணி நேரத்தை செலவிட்டு அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்டார்.

இந்த மையம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இம்மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா ஆகியோரும் சுல்தான் வருகையின் போது உடனிருந்தனர்.

இந்த மையம், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, எலக்ரோபிஸியோலோஜி உள்ளிட்ட பல்வேறு இருதய சிகிச்சைகளை சுமார் 50,000 பேருக்கு வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வின் போது சிலாங்கூரில் மருத்துவ துறையின் மேம்பாடுகள் குறித்து அமைச்சர் கைரி சுல்தானுக்கு விளக்கமளித்தார்.


Pengarang :