ALAM SEKITAR & CUACASELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்ற ஏற்பாட்டில் நீடித்த சுற்றுச்சூழல் திட்டம் அமல்

ஷா ஆலம், ஏப் 1- மக்கள் மத்தியில் மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் 2022 ஆம் ஆண்டிற்கான நீடித்த சுற்றுச்சூழல் திட்டத்தை ஷா ஆலம் மாநகர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

பிரேசர் அண்ட் நீவ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனம் மற்றும் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் இன்று தொடங்கி வரும்  அக்டோபர் 31 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

பாலர் பள்ளி மற்றும் ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகளை உட்படுத்திய மறுசுழற்சி போட்டி உள்ளிட்ட நடவடிக்கைகள் இக்காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், ஆரம்பப் பள்ளிகளுக்கான மறுசுழற்சி சுவரோவியப் போட்டியும் நடத்தப்படவிருக்கிறது. இது தவிர, அதிக எடை கொண்ட பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருள்களை அனுப்பும் பள்ளிகளுக்கு மாநகர் மன்றத்தின் சிறப்பு விருதும் வழங்கப்படும் என்றார் அவர்.

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரிப்பதை நோக்கமாக மறுசுழற்சி திட்டம் விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.நிலையில் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி அக்டோபர் 28 ஆம் தேதி வரையிலும் ஊராட்சி மன்ற பகுதிகள் நிலையில் ஏப்ரல் 1 முதல் அக்டோபர்  30 வரையிலும் நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :