ALAM SEKITAR & CUACAHEALTHNATIONAL

வெப்ப அலை- போதுமான அளவு நீர் அருந்துவீர், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பீர் மக்களுக்கு ஆலோசனை

ஷா ஆலம், ஏப் 1- நாட்டில் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை வெப்ப அலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொது மக்கள் அதிக நீரை அருந்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த வெப்ப அலை காரணமாக தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு தினசரி சிதோஷண நிலை 37 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் என்று வானிலை ஆய்வுத் துறை கூறியது.

நாட்டில் வெப்ப நிலை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு 37 டிகிரி செல்சியசை தாண்டும் பட்சத்தில் நாடு வெப்ப அலையை எதிர்கொள்வதாக கருதப்படும். வழக்கமாக மார்ச் முதல் ஏப்ரல் வரை இந்நிலை நீடிக்கும்.

இந்த வெப்ப அலை காரணமாக புகைமூட்டம் மற்றும் வறட்சி உண்டாவதற்கு வாய்ப்பு உள்ளதோடு வெப்ப வாதம் போன்ற உடலாரோக்கியப் பிரச்னைகளும் ஏற்படும் என்று அத்துறை எச்சரித்தது.

ஆகவே, பொது மக்கள் போதுமான நீரை அருந்த வேண்டும் என்பதோடு வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைக்கும் அதே வேளையில் வியர்வையை எளிதில் உறிஞ்சக்கூடிய ஆடைகளையும் அணிய வேண்டும் அது வலியுறுத்தியது.

மேலும், திறந்தவெளி தீயிடல் சம்பவங்களை தவிர்க்க வேண்டும் என்பதோடு போதுமான அளவு நீரையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Pengarang :