ECONOMYSELANGOR

சட்ட விரோதமாக நீர் இணைப்பை ஏற்படுத்திய பன்றி பண்ணை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை

ஷா ஆலம், ஏப் 2- சட்டவிரோதமாக குழாய் மூலம் நீர் இணைப்பை ஏற்படுத்திய கோல லங்காட், தஞ்சோங் சிப்பாட்டில் உள்ள பன்றி பண்ணைக்கு எதிராக நேற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஸ்பான் எனப்படும் தேசிய நீர் ஆணையம் கூறியது.

உயர் அழுத்தம் கொண்ட பாலித்திலின் குழாயை கொண்டு அந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டது ஸ்பான் மற்றும் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனையில் தெரிய வந்ததாக அது தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக குற்றப்பதிவு வெளியிடப்பட்டதோடு நீர் விநியோகத்தை துண்டிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது என்று ஸ்பான் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பான முறையில் நீர் விநியோகத்தை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த  ஆணையம் எச்சரித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு நீர் சேவை தொழில்துறைச் சட்டத்தின் 123(1) பிரிவின் கீழ் (சட்டம் 655) இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறிய அந்த ஆணையம் இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு லட்சம் வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம், ஒரு ஆண்டுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.


Pengarang :