ECONOMYSELANGOR

விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. கூரையில் நகர்ப்புற வேளாண் திட்டம்

ஷா ஆலம், ஏப் 5– விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. கட்டிட கூரையின் தோற்றத்தை மாற்றுவதற்கு ஏதுவாக லாமான் ஹீஜாவ்@3 எனும் நகர்ப்புற வேளாண் திட்டத்தை ஷா ஆலம் மாநகர் மன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சின் குறைந்த கார்பன் நகரங்களுக்கான மானியத் திட்டத்தின் கீழ் இந்த நகர்ப்புற வேளாண் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. கட்டிடத்தின் மூன்றாவது கூரைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த விவசாயத் திட்டமானது பசுமைக் கட்டிட கருத்தை முன்னிலைப்படுத்துவதையும் மற்ற கட்டிடங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதற்குமான முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.

இந்த லாமான் ஹீஜாவ்@3 திட்டம் காலியாக உள்ளதை கூரைகளை பயிர்கள் மூலம் அழகுப்படுத்துவதை மட்டுமின்றி புதிதான, தரமான மற்றும் ஆரோக்கியமான பயிர்களை உற்பத்தி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்றார் அவர்.

இந்த லாமான் ஹீஜாவ்@3 வேளாண் திட்டத்தை ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஜமானி அகமது மன்சோர்  நேற்று திறந்து வைத்தார். சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சின் பருவநிலை மாற்றத்திற்கான பிரிவின் செயலாளர் சுகுமாரி சண்முகம் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.


Pengarang :