Datuk Bandar Majlis Bandaraya Petaling Jaya, Mohamad Azhan Md Amir memberi bekas air kepada pengunjung ketika melawat bazar Ramadan SS6/1, Petaling Jaya pada 5 April 2022. Foto FIKRI YUSOF/SELANGORKINI
ANTARABANGSAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பெட்டலிங் ஜெயா ரமலான் பஜாருக்கு  பாத்திரங்கள் மற்றும் மறுசுழற்சி பைகள் கொண்டு வருபவர்கள் RM15 கூப்பனைப் பெறுகின்றனர்

ஷா ஆலம், ஏப்ரல் 6: பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிபிஜே) நிர்வாகத்தைச் சுற்றியுள்ள ரமலான் பஜாருக்கு உணவுப் பாத்திரங்கள் அல்லது மறுசுழற்சி பைகளைக் கொண்டு வரும் பார்வையாளர்களுக்கு RM15 கூப்பன் வழங்கப்படும்.

பாலிஸ்டிரீன் உணவுப் பாத்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்க, பஜாரின் நுழைவாயிலில் 2,000 கூப்பன்களை வழங்க ஏறுபாடு உள்ளதாக  டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமீர் கூறினார்.

“ஒவ்வொரு பஜாருக்கும் வெவ்வேறு கோட்டா உள்ளது. அந்த நாளில் மட்டுமே உணவு வாங்குவதற்கு கூப்பன்கள் பயன்படுத்தப் படுகின்றன. மக்கள் ஒவ்வொரு நாளும் அதைப் பெறலாம் ஆனால் தங்கள் சொந்த உணவுப் பாத்திரங்கள் அல்லது பைகளை கொண்டு வர வேண்டும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள கோ கிரீன் திட்டம் மற்றும் பிளாஸ்டிக் பையில்லா பிரச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எம்பிபிஜே மாதம் முழுவதும் 646 வர்த்தகர்களை உள்ளடக்கிய 20 ரமலான் பஜார் இடங்களை வழங்குகிறது, அவை மாலை 4 மணி முதல் 7 மணி வரை செயல்படும்.

பிப்ரவரியில், சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லாய் சியான், பிளாஸ்டிக் பைகள் இல்லாத பிரச்சாரம் இந்த ஆண்டு பெரிய அளவில் தீவிரப்படுத்தப்பட்டு, பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க பொதுமக்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.


Pengarang :